நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Wednesday, January 16, 2019

தமிழ் மக்களுக்காக கூட்டமைப்பு இதனை செய்ய வேண்டும்! கருணா கோரிக்கை


தமிழ் மக்களுக்கு மாற்றம் ஏற்படவேண்டுமானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைச்சுப் பொறுப்புகளை ஏற்று சேவையாற்றவேண்டும் என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த நான்கு வருட ஆட்சியில் எந்தவித முன்னேற்றமும் தமிழ் மக்களுக்கு ஏற்படவில்லை.
தமிழ் மக்கள் பல்வேறு வழிகளிலும் பின்னடைந்த நிலையிலேயே உள்ளனர். கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களை பாதுகாப்பதற்கு எவரும் இல்லாத நிலையே உள்ளது.
கிழக்கு மாகாணத்திற்கான ஆளுநராக நியமிக்கப்பட்ட வரை மாற்றுமாறு
   
   
   
  கோரி நாளை மற்றுதினம் மட்டக்களப்பு காந்திப்பூங்காவில் கையொப்பம் பெறும் நடவடிக்கை இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதிக்கு கிழக்கு மாகாண ஆளுநரை மாற்றுமாறு மகஜர் கையளிப்பதற்கான நடவடிக்கைகளை நாம் மேற் கொண்டு வருகின்றோம்.
அரசியல் தலைவர்களின் நிலைப்பாட்டினால் மக்கள் நம்பிக்கை இழந்து இருக்கின்றார்கள். தேர்தல் காலங்களில் மக்கள் சரியான தலைவர்களை தெரிவு செய்ய வேண்டும்.
இந்த ஆளுநர் நியமனத்திற்கு நாங்கள் முழு ஆதரவையும் தருவோம் என சம்பந்தன் ஐயா கூறியுள்ளார். இவர்கள் இதனை எதிர்க்க வில்லை.
இவ்வாறான பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்து கொண்டிருக்கின்றது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!