நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Sunday, January 13, 2019

அவமானப்பட்டும் அடங்காத மஹிந்த குடும்பம்: நாமலின் புதிய சூளுரை!

Sunday, January 13, 2019
Tags


எதிர்கட்சி ஆசனத்தில் அமர்ந்திருந்து ஆளுங்கட்சி ஆசனத்தையும் கைப்பற்றுவோம் எனவும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது இதுகுறித்து கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் இதுகுறித்து தொடர்ந்து பேசிய அவர், தற்போதைய அரசாங்கம் பதவி ஆசை கொண்ட அரசாங்கமாகும். மக்களுக்கு சேவையற்றாது பதவி ஆசையில் இருக்கின்றது.

நாட்டை இரண்டாக பிளவுபடுத்தும் செயற்பாடுகளில் அரசாங்கம் ஈடுபடுகின்றது. எனினும், அதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டு மக்களும் தற்போதைய அரசாங்கத்தின் மீது நம்பிக்கையற்ற நிலையில் இருக்கின்றனர். எங்களின் மீதே அதிக நம்பிக்கை வைத்துள்ளார்கள்.

இந்த நிலையில், அரசாங்கம் தேர்தலை நடத்தினால், பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைப்பது உறுதி எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்குமுன் கடந்த வருடம் நாடாளுமன்றத்தை கலைத்து மஹிந்த பிரதமராக மைத்திரியால் நியமிக்கப்பட்டு பெரும்பான்மையை நிரூபிக்கமுடியாமல் பதவி திறந்தமை குறிப்பிடத்தக்கது.