நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Thursday, January 3, 2019

மகனின் இறுதி மூன்று நொடியில் கட்டியணைத்து, முத்தமிட்ட தாய்.

Thursday, January 03, 2019
Tags


தனது மகன், மரணிக்க சில நொடிகளே இருந்த நிலையில், அவரது தாய் கட்டியணைத்தபடி முத்தமிட்ட சம்பவம் அனைவரின் மனதையும் உருக வைத்துள்ளது.

ஏமனைச் சேர்ந்த அகதியாக்கப்பட்ட இரண்டு வயது சிறுவன் அப்துல்லா ஹசன், பிறந்த போதே மூளை தொடர்பான நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், பல வருடங்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இருக்கும் மருத்துவமனையில் இந்த சிறுவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த சிறுவனின் தந்தை அமெரிக்க குடியுரிமையை பெற்ற நிலையில், மருத்துவமனையில் இருந்து சிறுவனை கவனித்து வந்துள்ளார்.

எனினும் சிறுவனின் தாய், ஏமனைச் சேர்ந்த அகதி முகாமில் தங்கியிருந்தமையினால், அவரால் அமெரிக்காவிற்கு வர முடியவில்லை. பல மாதங்களாக முயற்சி செய்தும், அமெரிக்க அரசு ஏமன் அகதிகளுக்கு விசா வழங்கவில்லை.

இந்த செய்தி ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டதை அடுத்து, அந்த பெண்ணுக்கு விசா வழங்கவேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அவரது இரண்டு வயது மகன் இறக்கும் தருவாயில் உள்ளமையினால், மகனை பார்ப்பதற்காக, அவருக்கு அமெரிக்க அரசு விசா வழங்கியது.

இதனை அடுத்து தனது மகனைப் பார்க்க ஓடோடிச் சென்ற, தாய், மகன் இறக்கும் கடைசி மூன்றே நொடிகளில் கட்டியணைத்து, முத்தமிட்டு விடை கொடுத்துள்ளார்.

இந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.