நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Thursday, January 3, 2019

இலங்கையில் ஞாயிற்றுக்கிழமை தொடர்பில் வருகிறது அதிரடி உத்தரவு

Thursday, January 03, 2019
Tagsஇலங்கையில் ஞாயிற்றுக்கிழமை தொடர்பில் வருகிறது அதிரடி உத்தரவு
ஞாயிற்றுக்கிழமை மற்றும் போயா தினங்களில் மேலதிக வகுப்புக்கள் நடத்தப்படுவதை தடை செய்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை முஸ்லிம் சமய விவகார அமைச்சு, இந்து மத விவகார அமைச்சு என்பவற்றுடன் இணைந்து கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.

நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறியுள்ளார்.

புலமைப் பரிசில் பரீட்சை, சாதாரண தரம் மற்றும் உயர் தரம் ஆகிய பரீட்சைகள் என்பவற்றுக்கு அறநெறிப் பாடசாலையினால் புள்ளிகள் சேரும் வகையில் இந்த அமைச்சரவைப் பத்திரம் அமையவுள்ளது.

இது தொடர்பில் கல்வி அமைச்சருடன் கலந்துரையாடியுள்ளதாகவும் எதிர்வரும் பரீட்சைகளுக்கு 10 புள்ளிகள் வீதம் வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.