நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Saturday, January 19, 2019

விக்னேஸ்வரனுடன் கூட்டணி கிடையாது… கஜேந்திரகுமார் அனுப்பிய தகவல்; கட்சியிலிருந்து வெளியேறிய ஐங்கரநேசன்: தமிழ் மக்கள் கூட்டணியின் மத்தியகுழு கூட்டம் ஆரம்பித்தது!
தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது பொதுக்கூட்டத்தை இன்று நடத்த திட்டமிட்டிருந்ததையும், கட்சி கட்டுமானப்பணிகள் எதிர்பார்த்ததை போ நடக்காமிருப்பதால் அது தள்ளிப்போனதையும் நேற்று குறிப்பிட்டிருந்தோம்.

அந்த செய்தியை பார்த்து விட்டு, தமிழ் மக்கள் கூட்டணியின் முக்கிய பிரமுகர் ஒருவர் தமிழ்பக்கத்துடன் பேசினார். கட்சிக்குள் நியமிக்கப்பட்டுள்ள 12 செயலாளர்களில் ஒருவர்.

இன்று மத்தியகுழு கூட்டம் நடப்பதை அவர்தான் தெரியப்படுத்தினார். வெறு சில தகவல்களையும் குறிப்பிட்டார்.

நேற்றைய செய்தியில் யாழ் பல்கலைகழக மாணவர் ஒன்றியத்திற்கும், தமிழ் மக்கள் கூட்டணிக்குமிடையில் ஏற்பட்டுள்ள நெருக்கத்தை பற்றி குறிப்பிட்டிருந்தோம். அது பற்றி மேலதிகமாக ஒரு தகவல் தந்தார்.

பல்கலைகழக மாணவர் ஒன்றியத் தலைவர் கிருஸ்ணமீனன், தமிழ் மக்கள் கூட்டணியின் வடக்கு கிழக்கு மாகாண இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ஆறு அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தீவகத்தில் உள்ளூர் பத்திரிகையான தினக்குரலின் பிரதேச செய்தியாளராக பணியாற்றிய ஒருவர் அமைப்பாளராக நியமிக்கப்பட்டதை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். வலிவடக்கு அமைப்பாளர், அ.யோதிலிங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட ஒருவர். யாழ் அமைப்பாளர்கள் அனேகர் வயதானவர்கள், செயற்பாட்டாளர்கள் அல்ல என அந்த மத்தியகுழு உறுப்பினரே கொஞ்சம் அதிருப்தியுடன் பேசினார்.

இதை கட்சியின் செயலாளர்- விக்னேஸ்வரனிடம் சொல்லலாமே என கேட்டோம். அப்போதுதான் ஒரு முக்கியமான விசயத்தை சொன்னார்.

கட்சிக்கு நிதியளிப்பவர்கள் பலர் வெளிநாட்டிலுள்ளவர்கள். கனடாவில் பீற்றர் என்பவர் இருக்கிறார். அவர் இப்போது இலங்கைக்கு வந்து, தனக்கு நெருக்கமானவர்களை அமைப்பாளர்களாக்க முயல்கிறார். அதுபோல ஐரோப்பிய நாடொன்றில் நளின் என்பவர் இருக்கிறார். அவர் தனக்கு நெருக்கமானவர்களை நியமிக்க முற்சிக்கிறார். கட்சியின் செயலாளர் விக்னேஸ்வரன் எல்லோருடனும் பேசுகிறார். எல்லோரது கருத்தையும் கேட்கிறார். ஆனால் இறுதியில் ஒரு முடிவை எடுக்க முடியாமல் திண்டாடுகிறார். அவர் உறுதியாக, தெளிவான முடிவை எடுக்காவிட்டால் கட்சிக்கு நீண்டநாள் நோக்கில் பிரச்சனைகள் வரும் என்றார்.

அத்துடன் மிக முக்கியமான விசயமொன்றையும் சொன்னார்.

விக்னேஸ்வரனின் வலது கையாக இருந்து வந்த முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இப்போது, தமிழ் மக்கள் கூட்டணி கட்சிக்குள் இல்லை!

கட்சி கட்டுமான விவகாரத்தில் இருவருக்கும் ஒத்த கருத்து ஏற்படாததால் ஐங்கரநேசன் வெளியேறிவிட்டார். ஐங்கரநேசனிற்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்குமிடையில் சில மாதங்களின் முன்னர் சில சுற்று பேச்சுக்கள் நடந்திருந்ததை தமிழ்பக்கம் அறிந்திருந்தது. அது விக்னேஸ்வரனின் காதிற்கும் போயிருக்கிறது. அதனால், ஐங்கரநேசன் தனது கூட்டணிக்கு வருவாரா அல்லது தமிழ் தேசிய மக்கள் முன்னணி பக்கம் செல்வாரா என்ற குழப்பம் விக்னேஸ்வரனிடம் இருப்பதாக தெரிகிறது.

தமிழ் மக்கள் கூட்டணி கட்சிக்குள் இல்லாவிட்டாலும், அந்த கட்சியுடன் கூட்டணி வைக்கும் முடிவில் ஐங்கரநேசன் இருப்பதாக தமிழ்பக்கம் நம்பிக்கையான சில மூலங்களிலிருந்து அறிந்தது.

இதேவேளை, எதிர்கால தேர்தல்களில் தமிழ் மக்கள் கூட்டணியுடன் எந்த கூட்டும் வைக்கப் போவதில்லையென்பறு, சில வாரங்களின் முன்னர் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுதியாக- உத்தியோகபூர்வமாக விக்னேஸ்வரனிற்கு அறிவித்தது என்பதையும் மிக நம்பகரமான மூலங்களிலிருந்து தமிழ்பக்கம் அறிந்துள்ளது.நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!