நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Saturday, January 19, 2019

வட, கிழக்கு அபிவிருத்தியில் அதிக கவனம் செலுத்தும் கூட்டமைப்பு: ரணில் தலைமையில் புதிய செயலணி உருவாக்கம்!

தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிற்கான அபிவிருத்தி செயலணிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 8 பேரும், இரண்டு இணைப்பு செயலாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இந்த செயலணியில் வடக்கின் 5 நாடாளுமன்ற உறுப்பினர்களும், கிழக்கின் 3 நாடாளுமன்ற உறுப்பினர்களுமாக 8 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கிலிருந்து மாவை சேனாதிராசா, சி.சிறிதரன், த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன், ஆகியோரும், கிழக்கிலிருந்து இரா.சம்பந்தன், சீ.யோகேஸ்வரன், கோடீஸ்வரன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு மாகாணத்திற்கான இணைப்பு செயலாளராக செல்வினும், கிழக்கு மாகாணத்திற்கான இணைப்பு செயலாளராக குகதாசனும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த கூட்டத்தின் முதலாவது கூட்டம் திங்கட்கிழமை மாலை அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளது.