நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Friday, January 18, 2019

சவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை


சவூதியில் நிர்க்கதி நிலையில், பெண்கள் நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள பெண்களை மீட்க உரிய நடவடிக்கைகளை ஒரு வார காலத்திற்குள் மேற்கொள்ளவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு கண்காணிப்பு அமைச்சர் ஹெட்டர் அப்புகாமி தெரிவித்துள்ளார்.
   
   
   
 
அத்துடன் சட்டவிரோதமான முறையில் ஆட்கடத்தல்களில் ஈடுபடும் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் மோசடிகளை செய்யும் முகவர் நிறுவனங்களை தடைசெய்யவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளத்தில் சவூதியில் நிர்க்கதியாக உள்ள பெண்கள் தொடர்பில் காணொளி ஒன்று பரவி வருகின்றமை குறித்து கேட்டபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அமைச்சர் கருத்து தெரிவித்தார்.
   
   
   
 
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் உலா வரும் குறித்த காணொளியில் பெண்கள் நலன்புரி நிலையம் ஒன்றில் பல பெண்கள் தங்கியிருப்பதாகவும், அவர்கள் பத்துப் பதினைந்து வருடங்களுக்கும் மேலாக ஊதியம் வழங்கப்படாது ஏமாற்றப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!