நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Thursday, January 3, 2019

இலங்கை வரலாற்றில் மைத்திரிக்கு ஏற்பட்ட நிலை! மீண்டும் நீதிமன்றில் மனு

Thursday, January 03, 2019
Tags


அங்கொடை மனநல ஆய்வகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிவில் செயற்பாட்டாளர் தக்சிலா ஜயவர்தனவின் ஆலோசனையின் பேரில், சட்டத்தரணி சிசிர குமார சிறிவர்தனவால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக நீதிப்பேராணை மனு கடந்த ஆண்டு டிசெம்பர் 10ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அண்மைய செயற்பாடுகள் காரணமாக அவர் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், அவரை உளவியல் ரீதியாக பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டது.

குறிப்பாக ஒக்டோபர் 26ஆம் திகதிக்குப் பிறகு ஜனாதிபதியின் செயற்பாடுகளில் சந்தேகம் இருப்பதாக தென்னிலங்கை அரசியல்வாதிகள் குறிப்பிட்டனர். சரத்பொன்சேகாவும் இதே கருத்தினை முன்வைத்திருந்தார்.

இந்நிலையில், சிவில் செயற்பாட்டாளர் தக்சிலா ஜயவர்தனவின் ஆலோசனையின் பேரில், சட்டத்தரணி சிசிர குமார சிறிவர்தனவால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக நீதிப்பேராணை மனு கடந்த ஆண்டு டிசெம்பர் 10ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டது.

அங்கொடை மனநல ஆய்வகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் மனுதாரர் அதில் கோரியுள்ளார்.

அத்துடன் இம் மனுவில் காவல்துறை மா அதிபருடன் கோட்டை தலைமையகப் காவல்துறை நிலைய பொறுப்பதிகாரியும் எதிர் மனுதாரராகக் குறிப்பிடப்பட்டுள்ளார்.

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக ஜனாதிபதிக்கு மனநிலைப் பாதிப்பு என்று கூறிய மேன்முறையீட்டு நீதிமன்றில் மேற்செல் எனும் நீதிப்பேராணை மனுத் தாக்கல் செய்யப்பட்டதும் இது தான்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மனநிலை பாதிப்பு எனத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்யாமலே ஆரம்ப நிலையில் தள்ளுபடி செய்யக்கோரி இடைபுகு மனு ஒன்று இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர சார்பில் அவரது சட்டத்தரணிகளால் தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.