நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Friday, January 4, 2019

மைத்திரிக்கு பின் இருந்து காய்நகர்த்தும் மஹிந்த! ஜனாதிபதி மைத்திரியா? மஹிந்தவா?

Friday, January 04, 2019
Tags
ஜனாதிபதி மைத்திரி அவர்களால் தெரிவு செய்யப்பட்ட ஆளுநர் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மீது குற்றம் சுமத்தப்படுகிறது.

ஆனால் நடந்தது வேறு தற்போது ஜனாதிபதியாக மைத்திரி இருந்தாலும் அதன் பின்னணியில் மஹிந்த அணியினரே செயற்பட்டு வருகின்றனர். அதற்கு உதாரணம் மக்கள் பணத்தை செலவு செய்து நடந்த பிரதமர் மாற்றம்.

மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஒருவரை பியதமராக்கியே தீருவேன் என்பது. இந்த நிலையில் ஜனாதிபதியின் அதிகாரங்களை கேள்விக்குள்ளாக்கும் ஒரு செயற்பாட்டை நீதிமன்றம் ஊடாக கூட்டமைப்பு செய்திருந்தது.

அதனால் கூட்டமைப்பினருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கை தளம்பல் நிலையை உருவாக்கவும் தனது அவமானத்தை ஈடு செய்யவும் அவரால் எடுக்கப்பட்ட மன்னிக்கவும் மஹிந்தவால் கொம்பு சீவப்பட்ட முக்கியமே இந்த ஆளுநர் தெரிவு. இதற்கு பொருப்புக் கூற வேண்டிய பலர் இன்னும் உறக்கத்தில் இருப்பது தான் வேடிக்கை.

ஜனாதிபதி அழைத்ததும் ஓடிப்போய் பதவி மோகத்தில் காலில் விழுந்தவர்கள் ஆளுநர் தொடர்பில் பேசி இருக்க வேண்டும். குறைந்த பட்சம் ஒரு ஊடக அறிக்கையாவது விட்டிருக்க வேண்டும்.

ஆனால் அப்படி செய்தால் தமது இரகசிய ஒப்பந்தங்கள் வெளியே வந்து விடும் என நினைக்கிறார்கள். "கூட்டமைப்பிடம் கேள்வி கேட்கும் தேச பக்தர்கள் முடிந்தால் ஒரே ஒரு தடவை இவர்களை கேள்வி கேளுங்கள் உங்களுக்கு பதில் கிடைக்கும்."