நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Wednesday, January 2, 2019

யாழில் வெடிமருந்துகள் மீட்பு

Wednesday, January 02, 2019
Tags


யாழ்.சிறுவர் நீதிமன்றத்திற்கு அருகாமையில் சி4 வெடிமருந்து 1 கிலோ மற்றும் டெனேட்டர் 4 ஆகியவை விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று இரவு யாழ்ப்பாணம்- கொழும்புத்துறை சிறுவர் நீதிமன்றத்திற்கு அருகாமையிலுள்ள பேருந்து தரிப்பிடத்திலிருந்து வெடிமருந்துகளை படையினர் மீட்டுள்ளனர்.

ஒரு கிலோ நிறையுடைய சி4 வெடிமருந்து 7 பொதிகள் மற்றும் டெனேட்டர் என அழைக்கப்படும் வெடி மருந்திற்குப் பயன்படுத்தப்படும் 4 குழாய்களும் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியிலுள்ள மீனவர்கள், மீன்பிடிக்க எடுத்து செல்வதற்காக பஸ் தரிப்பிடத்தில் இந்த வெடிமருந்துகளை வைத்திருக்கலாமென விசேட அதிரடிப்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் மீட்கப்பட்ட, வெடிபொருட்களை யாழ்ப்பாணம் நீதிமன்றில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையினை யாழ்.பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த மாதமும் குறித்த பேருந்து தரிப்பிடத்திலிருந்து, ஒரு தொகை வெடிமருந்துகள் விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.