நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Friday, January 4, 2019

வவுனியாவில் மாணவிகளிடம் பாடசாலை அதிபர் செய்த மோசமான செயல்! கொதித்தெழும் பெற்றோர்கள்

Friday, January 04, 2019
Tags


மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் பாடசாலை அதிபர் ஒருவர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா பாடசாலை ஒன்றின் அதிபரே நேற்று (4) மாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். வவுனியா நகரிற்கு அண்மையில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் அதிபர், தரம் 11இல் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களுக்கு கடந்த சில மாதங்கள் பிரேத்தியேக வகுப்புக்கள் நடாத்தி வந்துள்ளார். இந்த வகுப்புகளுக்கு பெரும்பாலும் மாணவிகளையே அவர் அழைத்துள்ளார்.

மாணவிகளை கண்களை மூடி தேவாரம் பாடிக் காட்டவேண்டும் என்றும் கூறி அந்த நேரத்தில் மாணவிகளிடம் அங்க சேஷ்டைகள் புரிந்துள்ளார்.இந்த விடயத்தை மாணவிகள் பெற்றோரிடம் கூறியதையடுத்து வலயக்கல்வி அலுவலகம் மற்றும் வவுனியா பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவ சமூகம் சார்பாக பெற்றோர்கள் முறைப்பாடுகளை வழக்கினர்.

பாடசாலையினுடைய 53 வயதுடைய அதிபரை பொலிஸார் நேற்று மாலை கைது செய்து பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் அதிபரை வவுனியா நீதிவான் முன்னிலையில் இன்று முற்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, இந்தப் பிரச்சினையை வெளிக்கொணர்வதற்கு பெற்றோருடன் இணைந்து செயற்பட்டார் என்று தெரிவித்து ஆசிரியை ஒருவரை வேறொரு பாடசாலைக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

Page 2 of 2

சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தின் போதே சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலராக தயாசிறி ஜயசேகர நியமிக்கப்பட்டார் என்று கட்சியின் மூத்த உறுப்பினர் நிசாந்த முதுகெட்டிகம தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக ரோகண லக்ஸ்மன் பியதாஸ கடந்த ஜூன் மாதம் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் அவர் 6 மாதங்கள் மட்டுமே அந்தப் பதவியில் நீடித்த நிலையில் புதிய பொதுச் செயலாளர் இன்று இவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.