நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Thursday, January 31, 2019

இலங்கையில் திடீரென மாயமான சிறுமி! தீவிர தேடுதல் வேட்டையில் பொலிஸார்

புத்தளம் – கருவலகஸ்வெவ – நீலபெம்ம பகுதியில் நான்கு வயது சிறுமி காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது.

  குறித்த சிறுமியை தேடும் நடவடிக்கை இன்று 3 ஆவது நாளாகவும் தொடரவுள்ளது.

நேற்று முன்தினம் குறித்த சிறுமி வீட்டில் இருந்தவாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.சிறுமி காணாமல் போகும் போது வீட்டில் அவரது தாத்தா மாத்திரமே இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டுக்கு அருகில் உள்ள கலா ஓயாவிற்கு சென்றிருந்த நிலையில், சிறுமி கூச்சலிடும் சத்தம் கேட்டு மீண்டும் திரும்பி வந்து போது அவர் காணாமல் போயிருந்ததாக தாத்தா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சிறுமியை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் சிவில் பாதுகாப்பு படையணி மற்றும் பிரதேசவாசிகளும் இணைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.