நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Friday, January 4, 2019

பொன்சேகாவிற்கும் - தெவரப்பெருமவிற்கும் இடையே உச்சத்தை எட்டிய மோதல்!

Friday, January 04, 2019
Tags


ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கும் – களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெருமவிற்கும் இடையிலான மோதல் மோசமான கட்டத்தை அடைந்திருக்கின்றது.

தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருந்தால் முதலில் தெரவப்பெரும போன்றவர்களை சிறையில் அடைத்திருப்பேன் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பிரதியமைச்சர் பாலித தெவரபெரும பிரதியமைச்சு பதவியை வைத்துகொண்டு முறையற்ற விதத்தி்ல செயறப்டுவதாக சரத் பொன்சேக்கா கடந்த முதலாம் திகதி குற்றச்சாட்டொன்றை முன்வைத்திருந்தார்.

இதற்க பதிலளிக்கும் வகையில் கருத்துத் தெரிவித்திருந்த பாலித தேவப்பெரும, பீல்ட் மார்சல் பட்டத்திற்கு சரத்பொன்சேக்கா தகுதியற்றவர் என்றும், அவர் பால் குடித்த தாயையே அறுத்தெறியும் குணம் கொண்டவர் என்றும் கடுமையாக சாடியிருந்தார்.

இந்த நிலையில், இதற்கு பதிலளிக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ள சரத் பொன்சேக்கா, ஊழல் ஒழிப்பு படையணியின் பணிப்பாளர் என்று கூறிக்கொள்ளும் நாமல் குமாரவை போல தெவரப்பெருமவும் கடற்படையில் இருந்து தப்பி சென்றவர் என்று குற்றம்சாட்டியுள்ளார்.