நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Saturday, January 19, 2019

தமிழர்கள் செறிந்த வாழும் பிரதேசத்தில் கொடூரமாக குத்திக் கொலை செய்யப்பட்ட மாணவி..!


மெல்பேர்ன் வடக்கு பகுதியில் தமிழ்மக்கள் செறிந்து வாழும் Bundoora பகுதியில் மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக விக்டோரிய பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர்.

மெல்பேர்ன் Greensborough பிரதேசத்தை சேர்ந்த 20 வயதான சந்தேநபரை இன்று முற்பகல் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலிய மாணவி Aiia Maasarwe என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டிருந்தாக தெரிவித்துள்ளனர்.

சம்பவம் இடம்பெற்று இரண்டு நாட்களாக மாணவியின் படுகொலை மர்மம் நிறைந்ததாக காணப்பட்டதுடன் கொலைக்கான எந்த சாட்சிகளும் கிடைக்காமல் பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியிருந்தனர்.

இந்நிலையில், கொலை இடம்பெற்றதாக கூறப்படுகின்ற இடத்திலிருந்து எடுக்கப்பட்ட ரீ சேர்ட் மற்றும் தொப்பியை பொதுமக்களின் பார்வைக்கு காண்பித்த பொலிஸார் அவற்றுக்கு சொந்தமானவர்களாக சந்தேகித்தால் அவர்களை தமக்கு தெரியப்படுத்தும்படியும் கோரியிருந்தனர்.

கொலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்ட அன்று இரவு அல்லது அடுத்த நாள் காலை இரத்தக்கறையுடன் வீட்டுக்கு வந்தவர்கள் அல்லது அதுபோன்ற சந்தேகத்துக்கிடமான நடவடிக்கையுடன் காணப்பட்டவர்களை தமக்கு தெரியப்படுத்தும்படியும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இதேவேளை, தமது தரப்பில் பெரும் எண்ணிக்கையிலான விசாரணை அதிகாரிகளை களத்தில் இறக்கியிருந்த பொலிஸார் இரவு பகலாக கொலையாளியை தேடிவந்தனர்.

கொலையினால் அதிர்ச்சியடைந்த மாணவியின் குடும்பத்தினர் அவுஸ்திரேலியாவுக்கு வந்துகொண்டிருக்கிறார்கள் என்றும் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தம்மிடம் பதில் இருக்கவேண்டும் என்றும்கூட பொலிஸார் நேற்று கூறியிருந்தனர். கொலை எவ்வாறு இடம்பெற்றிருக்கிறது என்பது குறித்தும் கொலையில் குறிப்பிட்ட மாணவிக்கு எவ்வகையான காயங்கள் ஏற்பட்டிருக்கிறது என்பது குறித்தும் பொலிஸார் எந்த தகவலையும் வெளியிட மறுத்திருந்தனர்.

கொலையுண்ட மாணவியின் குடும்பத்தினரின் உணர்வுகளுக்கு மதிப்புக்கொடுக்கும் வகையில் அந்த தகவல்களை பொதுவெளியில் வெளியிடப்போவதில்லை என்றும் கூறியிருந்தனர். எனினும், இந்தக்கொலை மிகவும் கொடூரமான முறையில் நிகழ்த்தப்பட்டிருப்பதாக மாத்திரம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இன்று காலை குறித்த கைது இடம்பெற்றுள்ளது. விசாரணைகளை அடுத்து குறிப்பிட்ட நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!