நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Tuesday, January 1, 2019

65 வயதில் குழந்தை பெற்று காஷ்மீர் பெண் உலக சாதனை!

Tuesday, January 01, 2019
Tags


இயற்கையான முறையில் 65 வயதில் கருவுற்று குழந்தை பெற்று காஷ்மீர் பெண் உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.

நவீன யுகத்தில் 72 வயதுடைய பெண்மணிகள் வரை குழந்தை பெற்றுக் கொண்டதாக தகவல்கள் இருந்தாலும் அவை அனைத்தும் என்கிற செயற்கை கருவூட்டல் எனும் மருத்துவ தொழிற்நுட்பத்தின் அடிப்படையிலேயே சாத்தியமாகியுள்ளது.

இந்தியப் பெண்களுக்கு மாதவிலக்கு அதிகபட்சம் 47 வயதில் நின்றுவிடும், மாதவிலக்கு நின்ற பெண்கள் இயற்கையான முறையில் குழந்தை பெற்றுக்கொள்வது அரிதினும் மிக அரிதான செயலாகும்.

சுமார் 50 வயதுகளில் இயற்கையான முறையில் குழந்தை பிறந்துள்ளதாக செய்திகள் உள்ள நிலையில் 65 வயதில் இந்த காஷ்மீரப் பெண்மணி ஆரோக்கியமானதொரு பெண் குழந்தையை பெற்றுள்ளது உலக சாதனையாகும் என மகப்பேறு மருத்துவர் ஷப்Pர் சித்தீகி தெரிவித்துள்ளார். இந்தத் தம்பதிக்கு ஏற்கனவே 8 மற்றும் 10 வயதுகளில் 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த பெண் குழந்தையை அல்லாஹ் தனக்கு அருளிய விலைமதிப்பற்ற பரிசு என வர்ணிக்கும் இந்த பெண்மணியின் கணவர் ஹக்கீமுத்தின் 80 வயது முதியவர் என்பதுடன் ஏற்கனவே 2 குழந்தைகளை வளர்க்க சிரமப்பட்டு வரும் நிலையில் காஷ்மீர் மாநில அரசு தனக்கு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

காஷ்மீரில் தற்போது மத்திய பாஜக அரசின் ஏஜென்டான கவர்னர் ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

2006 ஆம் ஆண்டில் செயற்கை கருவூட்டல் முறைப்படி இதற்கு முன் மிக தனது 66வது வயதில் ஸ்பெயினைச் சேர்ந்த மரியா டெல் கார்மன் என்ற பெண் இரட்டை குழந்தைகளை ஈன்றெடுத்தார், இவர்களே பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் முதிய வயதில் குழந்தை பெற்ற பெண் என்ற அங்கீகாரத்திற்கு உரியவர்.