நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Thursday, January 3, 2019

3ஆயிரம் இலஞ்சம் வாங்கிய பொலிஸிற்கு 8 வருட சிறை-இலங்கையில் அதிரடி தீர்ப்பு!

மூவாயிரம் ரூபா இலஞ்சம் பெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு எட்டு வருட சிறைத் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரன் இந்த தீர்ப்பு உத்தரவினைப் பிறப்பித்துள்ளார்.

சம்மந்தப்பட்ட குற்றவாளியான பொலிஸ் கன்ஸ்டபிளுக்கு எதிராக போக்குவரத்து நெறிமுறையை மீறி லஞ்சம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் நாள் நடந்த இந்த லஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பாக லஞ்ச ஊழல் மற்றும் தடுப்பு ஆணைக்குழு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தது.

குற்றவாளிக்கு எதிராக நான்கு பிரிவுகளில் தனித்தனியே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.