நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Sunday, January 20, 2019

என்னை கண் கலங்க வைத்த காட்சி...(15.1.2019)   
   
   
 
நேற்று கொழும்பு வெள்ளவத்த நகரில் உள்ள ஒரு உணவகத்துக்கு சென்றிருந்தேன். அங்கு நான் உணவருந்திய பிறகு இந்த முதியவர் என் அருகில் நின்றுகொண்டிருந்த நிலையை பார்த்தவுடன் நொடிப்பொழுதில்  என் மனதில் மிகுந்த வலி ஏற்பட்டது... அவரின் மன ஓட்டம் என்னவாக இருக்கும் என்று பல கோணங்களில் என் மனம் பதரியது. என்னை பொறுத்த வரை அவர் இன்று தன் நிலைக்காக.. உணவுக்காக.. இப்படி கஷ்டப்படுகிறார்..  இளைஞர்களே.. அவர்கள் பெற்றெடுத்த பிள்ளைகளை எவ்வாறெல்லாம் தாலாட்டி.. சீராட்டி.. ஒவ்வொரு நாளும் அன்பு செலுத்தி இருப்பார்கள்..
   
   
   
  ஆனால் அவர்களுக்கு வயதானால் அவர்களின் பிள்ளைகளாகிய நாம்தான் குழந்தையாக கருதி காப்பாற்ற வேண்டும். இக்கடமை தவறினால் நாம் வாழவே தகுதி இல்லை.. நாம் மனிதனும் இல்லை.. தங்கள் அனுமதி இன்றி  புகைப்படம் எடுத்து வெளியிட்டதற்கு என்னை உங்கள் பிள்ளையாய் நினைத்து  மன்னிக்கவும் அய்யா...

        பதிவு  க,தசிந்திரன்நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!