நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Thursday, January 3, 2019

நீண்ட அடர்த்தியான கூந்தலுக்கு வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து செய்யும் மூலிகை எண்ணெய்! 100% அனுபவ பதிவு இது..! பகிருங்கள்…!

Thursday, January 03, 2019
Tags
ஹாய்…ஹாய்….டியர்ஸ்.! இன்று பெண்களுக்கான அழகு குறிப்பு பகுதியில் சூப்பரான டிப்ஸ் எடுத்துக் கொண்டு வந்து இருக்கிறேன். பெண்களுக்கு இருக்கும் மிக பெரிய பிரச்சனையே தலை முடி உதிர்வது தான். எவ்வளவு கஷ பட்டு வளர்க்கும் தலைமுடி திடீர் என உதிர ஆரம்பிக்கும் போது பலரும் கவலை படுவது மறுக்க முடியாத உண்மை தான். இதற்காக இமயமலையில் இருந்து எடுத்த மூலிகை அது இது என ஆயிரம் சொல்வார்கள். அப்படி மூலிகை இருந்ததா என கேட்டால் இல்லை என்பதாக தான் பதில் இருக்கும்.காரணம் வெறும் பணம் மட்டுமே கொடுப்போம் அது இமயமலை மூலியையாக இருக்கவே இருக்காது.

ஆனால் இமயமலை மூலிகைகளை விட சக்தி வாய்ந்த மூலிகைகள் எம் வீட்டிலேயே உள்ளது நாம் தான் கண்டுகொள்வதில்லை. எனக்கு தோழி ஒருத்தி கூறி இதனை நானும் செய்துள்ளேன். இப்போது மாதம் ஒரு முறை ஹேயார் கட் செய்கிறேன். இதனால் தான் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

இது முற்றிலும் அனுபவ பகிர்வு. இன்றைய மூலிகை ஆயில் செய்ய நவை என்ன என்று பார்க்கலாம். தேங்காய் எண்ணெய், வெந்தயம், கறிவேப்பிலை, மற்றும் விளக்கெண்ணெய். இவற்றை கொண்டு இன்றைய மூலிகை எண்ணெய் எப்படி செய்வது என பார்க்கலாம். முதலில் 100ml தேங்காய் எண்ணெயை பாத்திரத்தில் விட்டு மிதமான தீயில் வைய்யுங்கள்.

அதனுடன் வெந்தயம் 5 தேக்கரண்டி போடுங்கள், இவை மெதுவாக சூடாகும் போது கறிவேப்பிலை இரண்டு கைபிடி அளவு சேர்த்து மிதமான சூட்டில் வைத்து நன்றாக கொதிக்க வைய்யுங்கள். நீங்கள் தீயை அதிகமாக்கவே வேண்டாம். 5 நிமிடத்தின் பின் விளக்கெண்ணை இரண்டு தேக்கரண்டி விடுங்கள். இவை அனைத்தும் நன்றாக சூடாகியதும் இறக்கி ஆற வைய்யுங்கள்.

நன்றாக குளிர்ந்ததும் போத்தல் ஒன்றில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள். இதனை சுமார் இரண்டு மாதங்கள் வரை பயன் படுத்தலாம். பயன்படுத்தும் முறை: இந்த எண்ணெய்யை தலையில் அதாவது முடியின் வேர் பகுதியில் நன்றாக படும் படி மசாஜ் செய்து பூசுங்கள்.! அடுத்த நாள் குளியுங்கள். இதன் பயன் ஒரு மாதத்தில் உங்களுக்கு தெரிந்துவிடும். இது தான் உண்மையில் சிறந்த மூலிகை எண்ணெய்.!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது.