நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Saturday, December 15, 2018

கட்சி தாவல் பற்றி வியாழேந்திரன் mpயின் ஊடகஅறிக்கை

Saturday, December 15, 2018
Tagsஇப்போதல்ல எப்போதும் உயிருள்ளவரை  UNP இல் சேரும் எண்ணம் எனக்கில்லை! சிலர் என்னுடன் நேரடியாக கருத்து கேட்காமல்,  அவமானப்படுத்தும் நோக்கில் அவர்கள் தங்களை பிரபலபடுத்தும் நோக்கில் பொய்யான செய்திகளை பரப்பி வருகின்றனர். இதை சில ஊடகங்களும் செம்பு தூக்கிகளாக செய்து வருகிறார்கள் . காலப்போக்கில் இத்தகைய வேலைகளை செய்யும் ஊடகங்களை மக்கள் பொய் ஊடகங்களாக நிராகரிக்கும் நிலை ஏற்படும் . ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் எனது கிழக்கு தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற நல் நோக்கில் தான் பிரதி அமைச்சைப் பொறுப்பெடுத்தேன். கிழக்கில் தமிழர்கள் இனம் மாற்றம் செய்யப்படுகிறார்கள்.நில வளம் சூறையாடப்படுகிறது. இல்லை என்று யாராவது பகிரங்கமாக சொல்லட்டும்.  அந்த மக்களை காப்பாற்ற வேண்டியது எம் பொறுப்பு.தற்போதைய சூழலில் நான் எடுத்து பதவியை   தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது .  பதவி இல்லாவிட்டாலும் நான் ஜனாதிபதியிடம் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக ஜனாதிபதி உடன் தொடர்ந்து பேசுகிறேன் . அதில் எதுவித மாற்றமும் இல்லை. அதற்காக ஜனாதிபதி இல்லாவிட்டால் ஐக்கிய தேசிய கட்சியுடன் சேரப்போறேன் என்ற கதை மிகக் கேவலமானது . அத்தகைய வேலையை கனவிலும் நினைத்து பார்க்கமாட்டேன் . இன்னொன்றையும் கூறிக்கொள்கிறேன் " அரசியலில் எந்த தோல்வியும் நிரந்தரமானதல்ல". அதை விடுத்து உங்கள் கற்பனைக்கு வந்ததை எழுத வேண்டாம் . இரண்டு பக்கமும் பேசி செய்தியை வெளியிடுங்கள். அதுதான் ஊடகத் தர்மம்.