நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Sunday, December 30, 2018

Breaking news! புதிய அரசியல் கட்சியை கலைத்துவிட தயார்! விக்னேஸ்வரன் அதிரடி

Sunday, December 30, 2018
Tags


#cv_vigneswaran

தனது புதிய அரசியல் கட்சியை கலைத்து விட்டு வீட்டிற்கு செல்ல தயாராக இருப்பதாக வடகமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றிற்கு இன்று வழங்கிய செவ்வியை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “தமிழர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடத் தயாராக இல்லை என்றால் தனது புதிய கட்சியை கலைத்து விட்டு வீடு செல்ல தயாராக இருக்கின்றேன்.

இந்த நாட்டில் தமிழ் மக்களின் நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து செல்கின்றது. எங்கள் தேசிய அரசியல் பயணத்தில் நிச்சயமாக ஒரு மாற்றம் இல்லை என்றால், ஒரு பேரழிவை நான் முன்னோக்கி பார்க்கிறேன்.

இந்நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகியோர் தேசிய பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.