நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Friday, December 28, 2018

உயர்தர பரீட்சை பெறுபேறு வெளியீடு! பரீட்சை திணைக்களகத்தின் முக்கிய செய்தி

Friday, December 28, 2018
Tags


கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் வெளியீடு குறித்து ஊடகங்களில் வெளியாகும் வதந்திகளை பரீட்சை திணைக்களம் நிராகரித்துள்ளது.

பெறுபேறுகள் நேற்று வெளியாகுவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வந்த நிலையிலேயே பரீட்சை திணைக்களம் அதனை மறுத்துள்ளது.

எவ்வாறாயினும், பரீட்சை பெறுபேறுகள் நாளை மறுதினத்திற்கு முன்னர் வெளியாகும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு முன்னர் சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டியிருப்பதாக பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் டிசம்பர் 27ஆம் திகதியும், சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் மார்ச் 28ஆம் திகதியும், 5ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் ஒக்டோபர் 5ஆம் திகதியும் வெளியாகும் என கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தமைக்கு அமைய ஊடகங்களில் இவ்வாறு செய்தி வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.