நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Saturday, December 29, 2018

மட்டகளப்பு போதன வைத்தியசாலையில் தமிழர்களுக்கு எதிராக நடக்கும் கொடுமை

Saturday, December 29, 2018
Tags


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தாதியர் பயிற்சி கல்லூரியும் வைத்தியசாலையும் முற்றாக சிங்களமயமாகி வருகிறது.

மட்டக்களப்பு அரசியல்வாதிகளதும் அரசதுறை அதிகாரிகளினதும் கடமை தவறிய வயிற்றுப்பிழைப்புக்கான நிருவாக முறைமையால் மாவட்டத்தின் பல பாகங்களிலும் பௌத்தமயமாக்கல் எளிதாக நடந்து வருகிறது.

அந்தவகையில் இன்றைய தினம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நிருவாகத்தின் சீரின்மையை பயன்படுத்தி அந்த நிருவாகத்தின் கீழ் இயங்கும் தாதியர் பயிற்சி கல்லூரி அதிபர் மற்றும் போதனாசிரியர்கள், மாணவர்கள் உள்ளடங்கலான குழாத்தினர் பாரிய "பிரித்" ஓதும் நிகழ்வொன்றை நடாத்தியுள்ளனர்.

கல்லூரியில் பரிந்துரைக்கப்பட்ட பாடவிதான செயற்பாடுகளை மீறி, அனுமதிக்கப்பட்ட சமய சடங்கு சம்பிரதாயங்களை மீறி ஆர்ப்பரிப்புடன் ஆக்கிரமிப்பு மனோநிலையில் அக்கல்லூரியிலுள்ள சிங்கள மாணவர்களும் அதிபரும் இந்த நிகழ்வை நடாத்தினர்.

இனத்தை விற்று,தன்மானத்தை விற்று பிழைப்பு நடாத்துகின்ற தமிழர் வகையை சேர்ந்த அங்குள்ள தமிழ் போதனாசிரியர்களும் இந்த சடங்கிற்கு தமது பூரண ஆதரவை வழங்கியுள்ளனர்.வைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் நிருவாகத்தினரும் அதற்கு தமது ஆதரவை வழங்கியுள்ளனர்.

இனம்,மதம்,கலாச்சாரம் என்பன பறிபோகாது காத்த புனிதர்கள் வாழ்ந்த மண்ணில் இன்று அத்தனையும் செயலிழந்து போகிறது.இந்த நிலை தொடருமானால் அந்த கல்லூரியில் இனி விகாரை ஒன்று முழைக்கும்,பிக்கு ஒருவர் நியமனம் பெறுவார்,இனியென்ன.....நோயாளிகள் பிரித் ஓதியே காப்பாற்றப்படுவர்.