நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Sunday, December 16, 2018

நாட்டில் நாடகமாடிய ரணில்! ஜேவி.பியால் வெளிவந்த ரகசியம்

Sunday, December 16, 2018
Tags


குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச தனது தோல்வியை மூடி மறைத்துக்கொள்வதற்காக அவரிடமிருந்து ஏற்கனவே பறிக்கப்பட்ட பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக நாடகமொன்றை அரங்கேற்றியுள்ளதாக ஜே.வி.பி குற்றம்சாட்டுகின்றது.

சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் கூட்டுச் சேர்ந்து களவாக பிரதமர் பதவியில் அமர்ந்த மஹிந்த ராஜபக்சவின் பிரதமர் பதவியை நாடாளுமன்றிலும் அதேபோல் நாட்டின் அதி உயர் நீதிமன்றங்களிலும் பறித்த நிலையில் அவர் இந்த நாடகத்தை அரங்கேற்றியிருப்பதாக ஜே.வி.பி அறிவித்துள்ளது.

ஒக்டோபர் 26 ஆம் திகதி மைத்ரியுடன் இணைணந்து ஆட்சிக் கவிழ்ப்பை மேற்கொண்டு பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்ச பொறுப்பேற்க்கொண்டிருந்த போதிலும், நாடாளுமன்றமும், நாட்டின் உயர் நீதிமன்றங்களும் அவரது பிரதமர் பதவியை பறித்துவிட்டது.

இந்த நிலையில் டிசெம்பர் 15 ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் மஹிந்த ராஜபக்ச கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் விசேட நிகழ்வொன்றை நடத்தி தான் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக அறவித்தார்.

இதற்கு முன்னர் அங்கு அழைக்கப்பட்டிருந்த பௌத்த பிக்குகள் விசேட பிரித் பாராயணம் ஓதி ஆசீர்வாதம் வழங்கினர். இதனைத் தொடர்ந்து மஹிந்த தனது விசுவாசிகளை அழைத்திருந்த நிலையில் அவர்கள் பதவி விலகல் கடிதத்தில் கைச்சாத்திட்டார்.

இதனையடுத்து அங்கு கூடியிருந்தவர்கள் முன்னிலையில் மஹிந்த விசேட உரையொன்றை ஆற்றினார். இந்த உரை தனியார் தொலைக்காட்சிகளிலும், சமூக வலைத்தளங்களிலும் நேரலையாக ஒளிபரப்பப்பட்டன.

இதில் தான் ஆட்சி ஏற்றதற்கான காரணத்தையும், ஏன் பதவி விலக நேரிட்டது என்பதற்கான காரணங்களையும் மஹிந்த, தேர்தல்களை நடத்தாது காலத்தை கடத்தும் கட்சிகளின் கூட்டுக்க எதிராகவே தான் உட்பட தரப்பினரால் போராட வேண்டியுள்ளதாகத் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் பெரும்பான்மை பலம் இல்லாத ஐக்கிய தேசிய கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் பணயக் கைதியாக பிடிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் நாடு பெரும் நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்றும் மஹிந்த எச்சரித்தார்.

இந்த நிலையிலேயே அரசாங்கமொன்று இல்லாது நாட்டை தொடர்ந்தும் அழிவிற்குள் தள்ளிவிடாது தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பிரதமர் பதவியிலிருந்து விலக தீர்மானித்ததாகவும் மஹிந்த அறிவித்தார்.

எனினும் “சதித்திட்டம் தோல்வி, உண்மையான மக்களின் வெற்றிக்காக அணி திரள்வோம்” என்ற தொணிப்பொருளில் ஜே.வி.பி டிசெம்பர் 15 ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு கிருலப்பனையில் நடத்திய பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அந்தக் கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, இல்லாத பதவியில் இருந்து மஹிந்த விலகுவதாக நாடகம் ஆடுவது வேடிக்கையாக இருப்பதாகத் தெரிவித்தார்.

இதுகுறித்து அனுரகுமார தெரிவிக்கையில்,“மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியிலிருந்து விலகியிருக்கின்றாராம். விலகுவதற்கு அங்கு ஒன்றும் இல்லை. மஹிந்த ராஜபக்சவையும், அவரது அரசாங்கத்தையும் நாடாளுமன்றில் இரண்டு தடவைகள் தோற்கடித்து விரட்டியத்திருக்கின்றோம். எவ்வாறு அவர் பதவியை ஆரம்பித்தார். 

இருள் சூழ்ந்திருந்த போது இருவர் கூட்டு சேர்ந்து இரகசியமாக சத்திப்பிரமாணம் செய்துகொண்டு பிரதமர் பதவிக்கான வேலையை ஆரம்பித்தார் மஹிந்த. ஆனால் இன்ற பதவி விலகும் போது சுப நேரமொன்றை பார்த்து மஹிந்த பதவி விகியுள்ளார். பதவி விலகுவதற்கு மஹிந்த ராஜபக்ச சுப நேரம் பார்த்திருக்கின்றார். அதாவது வாழ்நாள் முழுவதும் பதவியில் இருந்து விலகியிருப்பதற்கே அவர் சுப நேரம் பார்த்திருக்கின்றார் போல்” என்றார்.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட ஜே.வி.பி யின் பிரசாரச் செயலாளர் விஜித்த ஹேரத், மஹிந்தவை ஏற்கனவே நாட்டு மக்களும், முற்போக்குவாதிகளும் இணைந்து பிரதமர் பதவியிலிருந்து விரட்டியடித்துவிட்ட நிலையிலேயே தனது தோல்வியை மறைத்துக்கொள்வதற்காக பதவி விலகல் நாகடத்தை மஹிநடத அரங்கேற்றியிருப்பதாக குற்றம்சாட்டினார்.

“மஹிந்த பதவியை ராஜினாமா செய்யவில்லை. பதவி விலக்கப்பட்டார். இந்த உண்மையை மறைத்துக்கொள்வதற்காக மஹிந்த தானே பிரதமர் பதவியிலிருந்த விலகிவிட்டதாக மக்களுக்கு காண்பிக்க முயல்கின்றார். 

மஹிந்த பதவி விலகவில்லை. நாட்டு மக்களும், முற்போக்குவாதிகளும் இணைந்து மஹிந்தவை பதவியில் இருந்து தூக்கி எறிந்துவிட்டனர். மஹிந்த தான் பலரை கட்டுப்படுத்தி வைத்திருப்பதாக பெருமிதம் வெளியிட்டு வந்தார். ஆனால் இந்த நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து மஹிந்தவை கட்டுப்படுத்திவிட்டனர். அத்துடன் நின்று விடாது மஹிந்தவை வீட்டிற்கே துரத்தி அடித்துவிட்டனர்”என்றார் விஜித ஹேரத்.