நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Monday, December 31, 2018

தனியார் வங்கியில் கொள்ளை! தேடுதல் வேட்டையில் பொலிஸார்

Monday, December 31, 2018
Tags


திஸ்ஸமஹாராம - பன்னிகமுவ சந்தியில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றில் கொள்ளையிடப்பட்டுள்ளதாக திஸ்ஸமஹாராம பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது வங்கியிலிருந்து சுமார் 27 இலட்சம் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த கொள்ளை சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது , கடந்த 29 ஆம் திகதி பணிநேரம் முடிந்து ஊழியர்கள் வங்கியை மூடிவிட்டு சென்றுள்ள நிலையில் நேற்று காலை மீண்டும் பணிகளை ஆரம்பிக்க வங்கியை திறந்த போது அதன் காப்பகம் உடைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது .

இந்நிலையில் திஸ்ஸமஹாராம பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதே வேளை வங்கியின் சி.சி.டிவி கமராவும் கொள்ளையர்களால் சேதமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், வங்கியில் காணப்பட்ட பாதுகாப்பு பெட்டகங்கள் இலத்திரணியல் உபகரணத்தால் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையிடப்பட்டுள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மேலும் , கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திஸ்ஸமஹாராம பொலிஸார் மேற்கொண்டு வரகின்றமை குறிப்பிடத்தக்கது.