நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Monday, December 31, 2018

ஜனாதிபதியின் புது வருட வாழ்த்துச் செய்தி

Monday, December 31, 2018
Tags


ஒரு நாடு என்ற வகையில் இன்று எம்முடன் இருக்கின்ற அரசியல், பொருளாதார மற்றும் சமூக பிரச்சினைகள் தொடர்பில் எமது பொறுப்புக்கள் மற்றும் கடமைகள் பற்றியும் எம் முன் இருக்கின்ற சவால்கள் பற்றியும் நாம் அறிந்து தெரிந்திருப்பது மிகவும் முக்கியமான அடிப்படை தேவையாக அமைகின்றது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

முழு உலகும் ஏற்றுக்கொண்டிருக்கும் புதிய தொழிநுட்ப முறைகள் மற்றும் திட்டங்களுடன் செயற்படும் பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காக 2019 ஆம் ஆண்டில் செயற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை நாம் அனைவரும் அறிவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேநேரம், இந்த புத்தாண்டு நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் புதிய இலக்குடனான புதிய யுகம் பிறக்கும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடத்தில் முகம் கொடுக்க நேர்ந்த பாரிய சவால்களை வெற்றிக் கொண்டு, இந்த ஆண்டு மக்களுக்கு வெற்றிகளைப் பெற்றுக் கொடுப்பதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

இதேவேளை, புது வருட பிறப்பை முன்னிட்டு பட்டாசு கொளுத்துபவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு சுகாதார அமைச்சு கோரியுள்ளது.

அத்துடன் மதுபோதையுடன் வாகன செலுத்துபவர்களை கைது செய்வதற்காக விசேட காவற்துறை நடமாடும் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.