நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Saturday, December 29, 2018

மீண்டும் ரணிலின் சகாக்களிற்கு வலை விரிக்கும் மைத்திரி அணி

Saturday, December 29, 2018
Tagsமீண்டும் ரணிலின் சகாக்களிற்கு வலை விரிக்கும் மைத்திரி அணி
ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்களை தமது கட்சியில் இணையுமாறு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

தற்போது அதிருப்தியில் இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இது சிறந்த தீர்வாக அமையுமென நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களான சமிந்த விஜேசிறி , ஹேஷா விதானகே , ஹெக்டர் அப்புஹாமி மற்றும் லக்ஷ்மன் விஜேமான்ன உள்ளிட்டவர்கள் அமைச்சுப் பதவி கிடைக்காத நிலையில் விமர்சன ரீதியான கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.

இதனிடையே ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்களுக்கு அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.