நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Saturday, December 29, 2018

"சயந்தனின் டீல்" குறித்து பதிலளிக்கும் சுமந்திரனின் பேட்டியின் ஒரு சிறு பகுதி இரண்டு நிமிடப் பேச்சிலேயே இரண்டு பெரும் பொய்கள்.

Saturday, December 29, 2018
Tags

வெளிப்பார்வைக்கு உண்மை போன்ற மயக்கம் தரும் வரலாற்று புரட்டுக்கள் அவை.

அதுவும் "எல்லோருக்கும் தெரிந்ததே" என்று அழுத்திக் குறிப்பிட்டு அவரது வரலாற்று புரட்டுக்கு நம்மையும் துணைக்கழைக்கிறார்.

01. புலிகள் தம்மையும் மீறி  தேர்தல் அரசியலில் ஈடுபட்டவர்களை கொலை செய்தார்களாம்...

புலிகள் தேர்தல் அரசியலை நிராகரித்தது உண்மை. ஆனால் அதற்காக அதில் ஈடுபட்டவர்களைச் சுடவில்லை. தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற போர்வையில் தமிழர் தேசத்தின் இறைமையை அடகு வைக்க முற்பட்டதும் / எதிரிகளுடன் இணைந்து போராட்டத்தைக் காட்டிக் கொடுத்ததாலுமே சிலர் தண்டிக்கப்பட்டார்கள். அத்தோடு அது கொலை அல்ல தண்டனை - உயிரை விலையாக்கி இரத்தத்தையும் / கண்ணீரையும் சொரிந்தபடி  போராடிக் கொண்டிருக்கும் மக்கள் சார் அறத்தின் வழுவாத நீதி அது.

02. அடுத்து  பேச்சுவார்த்தைக்கு வசதியாக நோர்வே உட்பட பல நாடுகள் கேட்டுக் கொண்டதற்காக எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்ட ஜனநாயக கட்சி ஒன்றின் தேவை கருதி கூட்டமைப்பு உருவாக ஏதோ புலிகள் வழி விட்ட மாதிரி கதை விடுகிறார்.

இதுவும் ஒரு வரலாற்று புலுடா.

பேச்சுவார்த்தை என்பது புலிகளை ஒரு சம தரப்பாக அங்கீகரித்து புலிகளுடன் மட்டுமே பேச எழுதப்பட்டதே புரிந்துணர்வு உடன்படிக்கை.

தாய்லாந்து தொடக்கம் நோர்வே வரை நடந்த பல சுற்று பேச்சுக்களில் ஒன்றிலாவது கூட்டமைப்பு,  புலிகள் தவிர்த்து ஒரு பேசும் தரப்பாக கலந்து கொண்டதை சுமந்திரன் சுட்ட முடியுமா?

கூட்டமைப்பு முழுக்க முழுக்க புலிகளால் உருவாக்கப்பட்ட ஒன்று. அதை புலிகள் சுயாதீனமாகவே தூர நோக்கில் உருவாக்கினார்கள்.

அதில் பெரும் பங்காற்றிய பலரில் ஒருவரான மாமனிதர் சிவராம் கூட்டமைப்பு உருவாக்கம் பற்றி பேசிய/ எழுதிய குறிப்புக்களையாவது 
சுமந்திரன் செம்புகள் தேடிக் கற்றறிந்து கொள்ள வேண்டும்.
Via Parani Krishnarajani