நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Monday, December 31, 2018

யாழ்ப்பாணத்தில் தனியாக இருக்கும் வயோதிக தம்பதியிடம் மர்மநபர் செய்த மோசமான செயல்! வெளியான அதிர்ச்சி தகவல்

வீட்டில் தனித்திருந்த வயோதிபத் தம்பதியை அச்சுறுத்தி நகை மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.இந்தச் சம்பவம் அராலி தெற்கு வட்டுக்கோட்டை உடையார்கட்டுப் பகுதியில் இன்று அதிகாலை நடந்துள்ளது.

அதிகாலை 2 மணியளவில் வீட்டுக் கூரையைப் பிரித்து உள் நுழைந்த முகமூடி அணிந்த இருவர் வீட்டில் தனித்திருந்த 62 வயதுடைய கணவன், மனைவி மற்றும் மனைவியினுடைய தாய் ஆகியோரை அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

வீட்டில் வைத்திருந்த 55 பவுண் தங்க நகைகள் மற்றும் 15 ஆயிரம் ரூபா பணம் என்பன கொள்ளையிடப்பட்டன.இந்தச் சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டைப் பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டைப் பொலிஸாருடன் இணைந்து யாழ்ப்பாணம் குற்றத்தடவியல் பொலிஸ் மற்றும் மோப்பநாய் உதவியுடன் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.