நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Friday, December 28, 2018

மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு கடும் எச்சரிக்கை

Friday, December 28, 2018
Tags


நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிராக மைத்திரிபால சிறிசேனவுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்க் கட்சித் தலைவராக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவை நியமிக்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாதுகாப்பு இயக்கம், சபாநாயகர் கருஜயசூரியவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திலங்க வீரகோன் தெரிவித்தார்.

மேலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கத்துவம் பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக, ஜனாதிபதி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவ்வாறு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்காவிட்டால் தாம் சட்டத்தை நாட வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.