நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Sunday, December 30, 2018

மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவியின் ஆசை

Sunday, December 30, 2018
Tags


வகுப்புகளுக்கு ஒழுங்கான முறையில் சென்று படித்ததனால் தான் கணிதத் துறையில் முதலிடத்தைப் பெற முடிந்தது என வவுனியா மாவட்டத்தில் கணிதத்துறையில் முதலிடம் பெற்ற இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவி ஜெககுமாரன் பூஜிதா தெரிவித்துள்ளார்.

வெளியாகிய உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றில் 3ஏ சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் முதலிடத்தையும், தேசிய ரீதியில் 14 ஆவது இடத்தையும் பெற்றமை குறித்து வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவி ஜெ.பூஜிதா தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நான் மாவட்டத்தில் முதல் நிலை பெற்றமை மகிழ்ச்சியாகவுள்ளது. நான் இந்த நிலையை அடைவதற்கு காரணமான எனது பெற்றோர், என்னை வழிகாட்டிய அதிபர், ஆசிரியர்களுக்கு நன்றிகள்.

நான் வகுப்புக்களுக்கு ஒழுங்காகச் சென்று ஆசிரியர்கள் தரும் விடயங்களை அவதானித்து ஒழுங்காக படித்தமையினாலேயே இந்த நிலையை அடைய முடிந்தது.

வருங்காலத்தில் ஒரு பொறியியலாளராக வந்து சமூகத்திற்கு சேவையாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பம்“ என தெரிவித்துள்ளார்.