நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Friday, December 28, 2018

யாழ் பல்கலைகழகத்தில் மாணவனுக்கு நேர்ந்த அசிங்கம்...பின் மாணவன் எடுத்த விபரீத முடிவு

Friday, December 28, 2018
Tags


யாழ்.பல்கலைகழக மாணவன் ஒருவன் பகிடிவதை காரணமாக கழுத்தறுத்து தற்கொலைக்கு முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்.பல்கலைகழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் கற்கும் பளை பகுதியை சேர்ந்த முதலாம் வருட மாணவனே தற்கொலைக்கு முயற்சித்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.

குறித்த மாணவன் நேற்று வெள்ளிக்கிழமை மாலை வீட்டிலிருந்தவர்களிடம் பல்கலைகழகத்தில் தான் மோசமான பகிடிவதைக்கு உள்ளாகி வருவதாக தெரிவித்துள்ளார்.

பின்னர் தனது அறைக்குள் சென்று கழுத்தை அறுத்துள்ளார்.அதனை அவதானித்த வீட்டிலிருந்தோர். மாணவனை உடனடியாக மீட்டு பளை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

பளை வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சை கிளிநொஞ்சி வைத்தியசாலையில் மாணவன் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.