நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Sunday, December 30, 2018

ஆளுநர் பதவிகளில் திடீர் மாற்றம்! மூவருக்கு ஆப்பு..

Sunday, December 30, 2018
Tags


ஒன்பது மாகாணங்களுக்குமான ஆளுநர் பதவிகளில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன், தற்போது ஆளுநர் பதவிகளில் உள்ள மூவரின் பதவி பறிபோகவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், மாகாண ஆளுநர்களுக்குமிடையிலான சந்திப்பு எதிர்வரும் ஜனவரி மாதத்தின் முற்பகுதியில் இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பின் பின்னரே, ஆளுநர் பதவிகளில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு சிலருக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அத்துடன், புதிய சிலருக்கு வாய்ப்பளிக்கும் நோக்கிலேயே மூன்று பேரின் பதவி பறிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.