நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Monday, December 31, 2018

மரணத்தை தடுக்கும் அதிசய பானம்! உடனே தயாரிக்கலாம்? எப்படி தெரியுமா?


இதய பிரச்சினைகளான மாரடைப்பு, பக்கவாதம், வாஸ்குலார் நோய்கள் போன்றவை வருவதற்கு பெருந்தமனி தடிப்புகள் தான் காரணம்.

பெருந்தமனி தடிப்பினால் இதய குழாய் கடினமாகி, சுருங்கிவிடும். இதன் காரணமாக இதயத்தில் இரத்த ஓட்டம் குறைந்து, பல இதய நோய்களால் அவஸ்தைப்பட நேரிடுகிறது.

பொதுவாக தமனி குழாய்களின் உட்பகுதி எண்டோதிலியம் என்னும் மெல்லிய படலத்தால் மூடப்பட்டிருக்கும். இந்த எண்டோதிலியம் தான் தமனிகளில் இரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது.

இருப்பினும் உயர் இரத்த அழுத்தம், உயர் கொலஸ்ட்ரால், புகைப்பிடித்தல் போன்றவற்றால் இந்த எண்டோதிலியம் பாதிக்கப்பட்டு, தமனிகளில் ப்ளேக்கை உருவாக்கி, இரத்த ஓட்டத்தை தடை செய்கிறது.

இப்படி இதய குழாய்களில் ஏற்படும் அடைப்பால், இரத்த ஓட்டம் குறையும் போது, நெஞ்சு வலியை உண்டாக்குகிறது. தமனிகளில் உள்ள அடைப்புக்களைப் போக்க பல்வேறு மருந்துகள் இருந்தாலும், அவற்றால் பக்கவிளைவுகளும் ஏற்படும்.

இதய நோயால் மரணம் ஏற்படுவதைத் தடுக்கும் அற்புத பானம் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

உலர் திராட்சை

உலர் திராட்சையில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் உள்ளது. அதோடு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பொட்டாசியத்தின்

அளவும் அதிகமாக உள்ளது. இச்சத்துக்கள் கொலஸ்ட்ரால் அளவை சீராக்கி, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த அவசியமானவைகளாகும்.

தேவையான பொருட்கள்
  • உலர் திராட்சை - 1 கப்
  • துருவிய இஞ்சி - 2 டேபிள் ஸ்பூன்
  • தேன் - 2 டேபிள் ஸ்பூன்
  • க்ரீன் டீ - 4 டேபிள் ஸ்பூன்
  • தண்ணீர் - 1 லிட்டர்
தயாரிக்கும் முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி குறைவான தீயில் கொதிக்க விட வேண்டும். பின் அடுப்பை அணைத்து, அதில் மற்ற பொருட்களை சேர்த்து, நன்கு கலக்க வேண்டும். பின்பு ஒரு உல்லன் துணியால் பாத்திரத்தை மூடி 8 மணிநேரம் ஊற வைத்தால், குடிப்பதற்கு பானம் தயார்.

பருகும் முறை

இந்த பானத்தை தினமும் ஏதேனும் இரண்டு வேளை உணவு உண்பதற்கு முன் 150-200 மிலி குடிக்க வேண்டும்.

பானத்தின் இதர நன்மைகள்

இந்த பானம் தமனிகளில் உள்ள அடைப்புக்களை நீக்கி சுத்தம் செய்வதோடு, உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, எப்பேற்பட்ட தொற்றுக்களையும் எதிர்த்துப் போராடும். மேலும் இந்த பானம் கல்லீரலையும் சுத்தம் செய்யும்.

நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!