நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Friday, December 28, 2018

இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய புத்தர்சிலை விவகாரம்! கையும் களவுமாக சிக்கிய குற்றவாளி?

இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய புத்தர்சிலை விவகாரம்! கையும் களவுமாக சிக்கிய குற்றவாளி?
மாவனெல்லை பகுதியில் புத்தர் சிலைகளை உடைத்தார் என்ற குற்றச்சாட்டில், முஸ்லிம் இளைஞர் ஒருவரை அந்த பகுதி மக்கள் மடக்கிப்பிடித்தனர்.

அதிகாலை நான்கு மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரை பிரதேச வாசிகள் மடக்கியபோது, ஒருவர் தப்பியோடியுள்ளார்.

மடக்கிப்பிடிக்கப்பட்டவரை பிரதேசவாசிகள் தாக்கி, மின்கம்பத்தில் கட்டி வைத்தனர். பின்னர் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

முன்னதாக மாவனெல்லை பிதேசத்தில் புத்தர் சிலைகள் விசமிகளால் உடைக்கப்பட்டிருந்தன. ரன்திவல,மகதேகம ஆகிய பிரதேசத்தில் அமைக்கப்பட்ட இரு புத்தர் சிலைகளே விசமிகளால் உடைக்கப்பட்டிருந்தன. மாவனல்லையை அண்மித்த சில இடங்களில் விசேட அதிரடிப்படை பபாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.