நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Friday, December 28, 2018

ரணில் அரசாங்கத்திற்கு அதிர்ச்சி கொடுத்த மைத்திரி! வெளியானது வர்த்தமானி

Friday, December 28, 2018
Tagsபுதிய அமைச்சரவையின் அமைச்சர்களின் பணிகள், அவர்களுக்கான திணைக்களங்களை உறுதி செய்யும் விசேட வர்த்தகமானி வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைய, 2103 / 33 என்ற இலக்கத்தின் கீழ் வர்த்தமானி வெளியாகியுள்ளது.

அதில் ஊடகத்துறை சார்ந்த முக்கிய நிறுவனங்கள் ஜனாதிபதி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளார்.

ஜனாதிபதியினால் பாதுகாப்பு அமைச்சு உட்பட 21 நிறுவனங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அரச அச்சக திணைக்களம், பொலிஸ் திணைக்களம், தேசிய ஊடக மத்திய நிலையம், தேசிய மருந்துகள் கட்டுப்பாட்டு சபை ஆகியவைகள் அதற்குள் உள்ளடங்குகின்றது.

ஜனாதிபதியின் கீழ் செயற்படும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சுகளுக்கும் 21 நிறுவனங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நிர்வகிக்கப்படுகின்ற தேசிய கொள்கை, பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம் மற்றும் மறுவாழ்வு, வட மாகாண அபிவிருத்தி, தொழில்சார் பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சிற்கு 24 நிறுவனங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

இலங்கை பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு, தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை, இலங்கையின் ஊடக மற்றும் தகவல் தொடர்பாடல் திணைக்களம், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், ரூபவாஹினி கூட்டுத்தாபனம், சுயாதீன தொலைக்காட்சி சேவை, லங்கா ஐக்கிய செய்திகள் மற்றும் இலங்கை பொது உட்கட்டமைப்பு ஆணைக்குழு ஆகியவைகள் நிதி மற்றும் ஊடக ஊடக அமைச்சின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளது. அவற்றின் அமைச்சராக மங்கள சமரவீர செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.