நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Saturday, December 29, 2018

ஆட்டுக்குட்டிக்கு பாலூட்டிய நாய்.. நெகிழ வைக்கும் சம்பவம்...!

Saturday, December 29, 2018
Tags


புதுகோட்டையில் கஜா புயலால் தாயை இழந்த ஆட்டுக்குட்டி ஒன்றுக்கு நாய் பாலூட்டி9 வளர்த்து வரும் சமபவம் பார்ப்பவர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் குமரமலை கிராமத்தைச் சேர்ந்த துரைசாமி என்பவரது நாய் தான் இவ்வாறு நெகிழ வைக்கும் செயலை செய்துள்ளது.

அதாவது, துரைசாமியின் ஆடானது கடந்த மாதம் ஏற்பட்ட கஜா புயல் பாதிப்பால், உண்ண உணவு இல்லாமல் தவித்து வந்துள்ள நிலையில், அரிசியை தின்றதால், வயிறு ஊதி இறந்து போனது.

இந்நிலையில், தாய் ஆடு இல்லாமல் தவித்த ஆட்டுக்குட்டிக்கு துரைச்சாமி வளர்க்கும் நாயே தாயாக மாறி, ஆட்டுக்குட்டிக்கு தினமும் பாலூட்டி வளர்த்து வருகிறது.

இச்சம்பவத்தை பார்த்த எழுத்தாளர் சோளச்சி என்பவர் வீடியோ எடுத்து அதை தனது வளைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.