நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Saturday, December 15, 2018

பிள்ளையானை அன்றும் - இன்றும் நெஞ்சில் சுமக்கும் செல்வி

Saturday, December 15, 2018
Tags


அண்மையில் நடந்த மட்டக்களப்பு மாநகர சபை அமர்வில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணி தலைவியும், மாநகர சபை உறுப்பினருமான செல்வி என்பவர், தலைவர் சிவனேசத்துரை சந்திரகாந்தனை(பிள்ளையான்) நெஞ்சினிலே தாங்கியவாறு உரையை ஆரம்பிக்கின்றேன் என தனது உரையை ஆரம்பித்துள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டு மூன்று வருட காலங்கள் சிறையில் உள்ளார் என்பதை சுட்டிக்காட்டி அவரின் விடுதலைக்காக தாம் மௌன உண்ணா விரதம் இருக்கவுள்ளதாகவும் அவர் இச்சமயத்தில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தாம் பிள்ளையானின் விடுதலைக்காக போராடுவதாகவும், தீவிர விசுவாசி என்பதையும் இத்தருணத்தில் அவர் தனது உரையின்மூலம் எடுத்துரைத்துள்ளார்.

எனினும், சந்திரகாந்தனை நெஞ்சில் தாங்கியவாறு உரையை ஆரம்பிக்கின்றேன் என அவர் பேச ஆரம்பித்தபோது சபையில் ஏனையோரிடத்தில் மெல்லிய சிரிப்பு சத்தம் எழுந்தமை குறிப்பிடத்தக்கது அது மட்டுமல்லாது பிள்ளையான் வெளியில் இருக்கும் போதும் அவரை செல்வி நெஞ்சினிலே தான் தாங்கி இருந்தார் என மாநகர சபை உறுப்பினர்கள் முணு முணுத்தார்கள்...