Friday, December 28, 2018

பேரூந்து கட்டணத்தை குறைக்காத பேரூந்து உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை


பழைய விலைக்கே பேரூந்து பயணக்கட்டணங்களை அறவிடும் பேரூந்துகள் தொடர்பில் இதுவரை 23 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மேல் மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

கடந்த 26ம் திகதி நள்ளிரவு தொடக்கம் புதிய பேரூந்து பயணக்கட்டணங்கள் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில் , தொடர்ந்தும் பழைய விலைக்கே கட்டணங்களை அறவிடும் பேரூந்து உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதன் தலைவர் துசித குலரத்த தெரிவித்துள்ளார்.

பழைய விலைக்கு பேரூந்து கட்டணங்களை அறவிடும் பேரூந்துகள் தொடர்பில் என்ற தொலைப்பேசி இலக்கத்திற்கு அழைத்து முறைப்பாடு செய்யமுடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Disqus Comments