நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Monday, December 31, 2018

வருடம் முடியும் நாளில் இலங்கை வரலாற்றில் நடந்த மிகப் பெரும் பயங்கரமான சம்பவம்


தெஹிவளை கெளடான வீதியில் அமைந்துள்ள சொகுசு வீடொன்றிலிருந்து 200 கிலோ நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் பங்களாதேஷை சேர்ந்த இரண்டு பிரஜைகள் நேற்று போதைத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

போதைத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த இருவரும் இவ்வாறு 56/12/ஏ இலக்க கெளடான வீதி தெஹிவளையில் அமைந்துள்ள சொகுசு வீடென்றிலிருந்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது குறித்த வீட்டை சோதனையிட்ட பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ள போதைப்பொருட்களின் பெறுமதி 2400 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதிவாய்ந்தது என சம்பவம் தொடர்பில் போதைத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

போதைத்தடுப்பு பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தனபாலவின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் போதைத்தடுப்பு பிரிவு விசேட குழுவொன்றினால் சம்பவம் தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதனையடுத்து குறித்த இருவரையும் பொலிஸ் காவலில் எடுத்துள்ள போதைத்தடுப்பு பிரிவினர் இவை எவ்வாறு இலங்கைக்கு கடத்தப்பட்டது என்ற கோணத்தில் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இலங்கை வரலாற்றில் நடந்த மிகப் பெரும் பயங்கரமான சம்பவமாக வருடம் முடியும் நாளில் பதிவாகியுள்ளதாக கொழும்பு போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸ் பெறுப்பதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!