நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Sunday, December 30, 2018

ஹாட்லிக் கல்லூரி மாணவன் படைத்த சாதனை! குவியும் வாழ்த்துக்கள்
கடந்த ஒகஸ்ட் மாதம் இடம்பெற்ற உயர் தர பரீட்சை பெறுபேறுகள் இன்று இரவு வெளியாகியுள்ளன.

இந்நிலையில், யாழ். வடமராட்சியில் உள்ள ஹாட்லிக் கல்லூரியின் மாணவன் மிதுர்சன் முதல்நிலை புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.

உயிரியல் பிரிவில் 3A சித்தி பெற்று ஹாட்லிக் கல்லூரியில் 1ஆம் இடத்தையும், யாழ். மாவட்டத்தில் 2ஆம் இடத்தையும் பெற்றுள்ளார்.

இதேவேளை, அகில இலங்கையில் 77ஆம் இடத்தையும் பெற்று சாதனை படைத்திருக்கும் மிதுர்சனிற்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

மேலும், http://www.doenets.lk/exam/ என்ற இணையத்தளத்தின் மூலம் குறித்த பெறுபேறுகளை பார்வையிட முடியும்.