Sunday, December 30, 2018

புலிகளின் வான் படைபற்றி வெளியான அரிய தகவல்
ஒரு போராளி இயக்கமாக புலிகள் அமைப்பு சர்வதேசத்தை பல சந்தர்பங்களில் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.ஆனால் உலகை ஆச்சரிய பட மட்டும் வைக்காமல் பொறாமை கொள்ள வைத்த விடயம் தான் புலிகளின் வான் படை.

ஒட்டுமொத்த போராளிகள் ,புலம் பெயர் ஈழத்தமிழர்கள் பலரின் உழைப்புக்கும் மத்தியில் கேணல் சங்கர் ,சார்ல்ஸ் அன்டனி இருவரின் பங்களிப்பு இந்த விமான படையை பெரிய அளவில் வளர்த்தது.

கனடாவின் விமானப் பொறியியல் கல்லூரியில் தனது வான்படைக்கான கற்கைநெறியை நிறைவுசெய்த கேணல் சங்கர் அவர்கள் பின்னாளில் உலகமே வியந்த வான்படையணியை உருவாக்குவதில் அத்திவாரமாக இருந்தார்.

இளம் நீல நிற வரிப்புலிச் சீருடையும் ‘வானோடி’ என்று பொறிக்கப்பட்ட சின்னத்தையும் பொருத்தி ஒரு படை கட்ட வேண்டும் என்பது தலைவர் பிரபாகரனின் பல்லாண்டுக் கனவு. 

அவருடன் அப்பையா அண்ணை என்று ஒருவர் ஆரம்ப காலத்தில் இருந்திருக்கிறார். அவர்’நான் விமானம் செய்யப் போறேன்’ என்று சில வேளைகளில் ஆர்வம் காட்டி இருக்கிறார். அப்போது, எல்லாரும் அவரைக் கிண்டல் செய்வார்களாம்.

85, 86 காலப் பகுதிகளிலேயே புலிகள் விமானங்களை கட்டுதல் தொடர்பாக கவனம் எடுக்கதொடங்கி விட்டார்கள்.இப்பணிகள் மந்த மடைய ரஞ்சன் என்னும் போராளியின் விபத்து மரணம் ஒரு காரணம்.

1987 இல் ரஞ்சன் நாவற்குழி படை முகாமை தாக்க வெடி மருந்து நிரப்பிய பவுசரை தயார் செய்யும் போது தற்செயலாக அது வெடித்ததில் மரணமடைந்தார்.

இவர் பொறியியலாளரும் பொன்னம்மானின் உறவினரும் ஆவார்.ரஞ்சனும் வாசு என்ற போராளியும் விமானம் ஒன்றை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்கள்.

கடற்படையில் வேலை பார்த்த தனது நண்பன் டேவிட் மூலமாக ‘கடற்புலி’களை ஆரம்பித்ததலைவர் பிரபாகரன், வான் படைக்கு ஒரு நண்பரைத் தேடினார். 

சங்கர் கிடைத்தார். கனடாவில் ஏரோநாட்டிக்ஸ் படித்தவர். ஏர் கனடாவில் வேலை பார்த்தவர். 

கேணல் சங்கர் “சென்னையில் உள்ள இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில், ஏரோநாட்டிக்ஸ் பிரிவில் பி.இ. படித்தார். 

அதன் பின்னர் கனடா சென்றஅவர், அங்கு ஏர் கனடா விமான நிறுவனத்தில் பொறியியல் பிரிவில் பணியாற்றினார் என்றும் சில தகவல்கள் சொல்கின்றன.

செப்டம்பர் 27, 1998 – 1998ம் ஆண்டு மாவீரர்தின உரையின்போது தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் வான்புலிப் படைப்பிரிவு தொடர்பான முதல் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். 

அந்நிகழ்வின்போது வான்புலிகளுக்கு சொந்தமான வான்கலத்திலிருந்து பூக்கள் தூவப்பட்டதாக நேரில்பார்த்தவர்களுடைய அனுபவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மாவீரர் துயிலுமில்லம், வற்றாப்பளை அம்மன் கோவில் ஆகிய இடங்களில் 10 ஆண்டுகளுக்கு முன் இந்த விமானத்தை வைத்துப் பூத் தூவினார்கள். 

தலைவர் ‘பிரபாகரன் வைத்திருக்கும் விமானம் பூ தூவத்தான் லாயக்கு’ என்று சிங்களத் தளபதிகள் கூறினார்கள் .

‘விமானங்களை வாங்குவதற்கு முன் இயக்குவதற்கு ஆட்களைத் தயார் பண்ணுங்கள்’ என்று சங்கர் சொல்ல, ஒரு டீம் பிரான்ஸ், மலேசியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ‘சம்பந்தப்பட்ட நாட்டில் கொண்டுபோய்விட வேண்டியது எங்கள் வேலை. 

அங்கேயே ஏதாவது வேலை பார்த்துப் படித்து முடிக்க வேண்டியது உங்களது சாமர்த்தியம்’ என்ற அடிப்படையில் 20 பேர் அனுப்பப்பட்டார்கள். 

வெளிநாடு வாழ் ஈழத் தமிழர்களும் உதவ, படிப்பை முடித்து 2002-ல் இந்தக் குழு கிளிநொச்சி வந்து இறங்கியது. 

இவர்கள் விமானப்படை சம்மந்தமான தொழில்நுட்பங்களை சார்லஸூக்கு ஊட்டினார்கள்.அவர்களுக்கு தீனியாக சிறு விமானங்கள் தயாராக இருந்தன. ஒரு ஆள் மட்டும் பயணிப்பவை. 

செக்கோஸ்லோவாகியா நாட்டின் ‘சிலின் இசட் 143 எல்’ ரக விமானங்கள் இவை. நாங்கள் புலிகளுக்கு விற்கவில்லை என்று அந்த நாடு மறுக்கிறது. 

வாங்கியதை அப்படியே பயன்படுத்தாமல், அதில் பல மாறுதல்களைச் செய்துள்ளார்களாம். இங்குதான் சார்ல்ஸின் முக்கியப் பங்கு இருந்ததாகச் சொல்கிறார்கள்.

2000 ஆம் ஆண்டு – ‘வான்புலிகள் ஆண்டு’ என தமிழீழ விடுதலைப்புலிகளால் அறிவிக்கப்பட்டது.

கேணல் சங்கர் என்று அழைக்கப்பட்ட வித்தியாலிங்கம் சொர்ணலிங்கம் தலைமையில் வான்புலிகள் பிரிவுதொடங்கப்பட்டது. டிசம்பர் 2001 அவர் கொல்லப்படும் வரை வான்புலிகள் பிரிவின் தலைவராக செயற்பட்டார்.

பின்னர் வான் படையை ரத்னம் மாஸ்டர் என்பவர் வழிநடத்தினார். சிறு விமானத்தை அதிக பயன்பாடு உள்ளதாக மாற்றும் வேலையை சார்ல்ஸ் டீம் பார்த்தது. 600 கி.மீ தூரம் போய் திரும்பத்தான் அதில் எரிபொருள் நிரப்ப முடியும். 

அதாவது ஒரு முறை கொழும்பு போய்விட்டுத் திரும்ப முடியும். விமானத்தில் குண்டு நிரப்பிக்கொண்டு போய் ஓர் இடத்தைத் தாக்க வேண்டும் என்று முடிவெடுக்கும்போது, அவ்வளவு எடையைக் கொண்டுசெல்ல இந்த விமானங்கள் வசதிப்படவில்லையாம். 

எனவே, சுமார் 240 கிலோ எடைகொண்ட குண்டுகளைப் பொருத்தும் பலம்கொண்டதாக மாற்றும் காரியங்களை சார்ல்ஸ் டீம் பார்த்ததாம். 

அதே போல், ரேடாரின் கண்ணுக்குப் படாமல் தப்பிக்கவைக்கவும் இவர்களது குழு பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறது.

மார்ச் 26, 2007 – அதிகாரப்பூர்வமாக விடுதலைப்புலிகளால் உரிமை ஏற்கப்பட்ட முதலாவது வான் புலித் தாக்குதல் 26 மார்ச் 2007 இல் இலங்கை கட்டுநாயக்கா விமானப்படைத்தளத்தின் மீது நடத்தப்பட்டது.

புலிகள் வைத்திருந்த விமானத்தை ‘குரும்பட்டி மெஷின்’ என்று சிங்களவர்கள் கிண்டல் செய்வார்கள். 

வளர்ச்சியின் ஆரம்பத்தில் இருக்கும் தேங்காய்க்குக் குரும்பு என்று பெயர். அந்தக் குரும்பை வைத்து பலமுறை பலமான கோட்டைகளை குடைந்தெடுத்துவிட்டார்கள். 

அதுவும் குண்டுகளைக் கட்டிக் குதிக்கும் வான் கரும்புலிகள் வந்த பிறகு அச்சம் அதிகமாகி இருக்கிறது. ‘பலவீனமான இனத்தின் பலமான ஆயுதம்தான் கரும்புலிகள்’ என்று தலைவர் பிரபாகரன் சொல்லியிருக்கின்றார்.

‘காற்றிலேறி விண்ணையும் சாடுவோம்’ என்று வான் புலிகளின் சட்டையில் எழுதப்பட்டிருக்கிறது. அதுதான் கண்டம் விட்டுக் கண்டம் கலக்கத்தை ஏற்படுத்தியது.

இந்த புலிகளை அழித்தே ஆக வேண்டும் என்று பல நாடுகளை சிறு நிலப்பரப்பு களமுனையில் கூட்டு யுத்தத்தை நடத்த தூண்டியது.

0 கருத்துரைகள்:

Note: Only a member of this blog may post a comment.

tamil news tamil news ,
tamil news ,
sri lanka news ,
tamil ,
video ,
lankasri tamil news ,
jaffna news,
tamil cricket news ,
google tamil news ,
online shopping sri lanka