நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Saturday, December 29, 2018

வடக்கு - கிழக்கு இணைப்பு குறித்து சுமந்திரன் எம்.பி தகவல்

Saturday, December 29, 2018
Tags


வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படும் வரை அதிகார பரவலாகல் சம்பந்தமான விடயங்களை கைவிட முடியாது என கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் யாழில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை கூறியுள்ளார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”கடந்த நவம்பர் 7ஆம் திகதி கொண்டுவரப்படவிருந்த அரசியலமைப்பு வரைபைத் தடுப்பதற்காகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்தவை பிரதமராக நியதித்து குழப்பத்தை ஏற்படுத்தினார்.

நாட்டில் ஜனநாயகம் வீழ்ச்சி அடைகின்றதாக அல்லது சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைகின்றதாக இருந்தால், அதனால் மிகவும் பாதிக்கப்படுவது தமிழ் மக்கள். ஆகையினால், சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைவதை ஏற்க முடியாது. அதை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழர்களாக சுயநலத்துடன் சிந்தித்திருந்தால் கூட நாங்கள் அதைச் செய்திருக்க வேண்டும்“ என அவர் இதன்போது குறிப்பிட்டார்.