நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Saturday, December 29, 2018

பௌத்த மதத்திற்கான முக்கியத்துவத்திலும் நாட்டின் ஒருமைத் தன்மையிலும் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது

Saturday, December 29, 2018
Tagsபௌத்த மதத்திற்கு தற்போதைய அரசியல் அமைப்பில் வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவம், புதிய அரசியல் அமைப்பிலும் அவ்வாறே தொடரும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கண்டி, அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீட மாநாயக்க தேரர்களை நேற்று சந்தித்ததன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பிரதமராக பதவியேற்றதன் பின்னர், ரணில் விக்கிரமசிங்க நேற்றைய தினம் முதல் முறையாக மாநாயக்கர்களை சந்தித்துள்ளார்.
எதிர்காலத்தில் கொண்டுவரப்படும் எந்தவொரு அரசியல் அமைப்பு திருத்தத்திலும் பௌத்த மதத்திற்கான முக்கியத்துவத்திலும் நாட்டின் ஒருமைத் தன்மையிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்படமாட்டாதென மாநாயக்கர்களுக்கு தாம் உறுதியளித்ததாக பிரதமர் ரணில் விக்கரமசிங்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.