நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Monday, December 31, 2018

மைத்திரியால் பதவி விலகிய முக்கிய அரசியல் பிரபலம்! பரபரப்பில் இலங்கை அரசியல்

Monday, December 31, 2018
Tags


வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளனஆளுநரின் பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி சிறிசேனவிடம் குரே தனது இராஜினாமாவை சமர்ப்பித்துள்ளார் என அவரது பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்

இன்றைய தினத்திற்குள் பல ஆளுநர்களை பதவி விலகுமாறு ஜனாதிபதி சிறிசேன கேட்டுக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகின்றமை குறிப்பிடத்தக்கது

பல ஆளுநர்கள் இதனை உறுதி செய்துள்ளனர். ஜனாதிபதி ஆளுநர் பதவியில் மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளார் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.எனினும் தன்னை பதவி விலகுமாறு வேண்டுகோள் எதுவும் விடுக்கப்படவில்லை என கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித போகொல்லாஹம தெரிவித்துள்ளார்