நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Sunday, December 30, 2018

நாளை மீண்டும் திறக்கப்படுகிறது சுதந்திரக் கட்சி தலைமையகம்

Sunday, December 30, 2018
Tags


சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவை அடுத்து, மூடப்பட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகம், நாளை மீண்டும் திறக்கப்படும் என்று, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

“சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவின் பேரில், கடந்த 26ஆம் நாள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகம் மூடப்பட்டது.

தாம் தாய்லாந்தில் இருந்து திரும்பும் வரை, கட்சித் தலைமையகத்தை மூடுமாறும் சிறிலங்கா அதிபர் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், சிறிலங்கா அதிபர் நாடு திரும்பியுள்ள நிலையில், கட்சியின் தலைமையகம் நாளை மீண்டும் திறக்கப்படும்.” என்றும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, சுதந்திரக் கட்சி தலைமையகத்தின் சாவிகள்,மருதானை காவல்நிலையத்தில் கடந்த 26ஆம் நாள் ஒப்படைக்கப்பட்டிருந்தன.

இந்த சாவிகள் மறுநாள் பிற்பகல் 3.15 மணியளவில், சுதந்திரக் கட்சி பிரதிநிதிகளால் பொறுப்பேற்கப்பட்டதாக, சிறிலங்கா காவல்துறை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.