நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Monday, December 31, 2018

புதிய அரசியலமைப்பின் ஊடாக தமிழர்களுக்கு ஒருபோதும் தீர்வு கிடைக்காது!

Monday, December 31, 2018
Tags


புதிய அரசியலமைப்பின் ஊடாக தமிழர்களுக்கு ஒருபோதும் தீர்வு கிடைக்காது என்று ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவரான சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த சில நாட்களில் நாட்டின் அரசியலில் ஏற்பட்ட மாற்றத்திற்கு கூட்டமைப்பு தனது முழுப்பங்களிப்பினை வழங்கியதன் மூலம் மீண்டும் ரணில் தலைமையிலான ஆட்சியினைக் கொண்டு வந்தது.

எனவே இந்தக் காலப்பகுதியில் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கான தீர்வு உள்ளிட்ட விடயங்களைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

இந்தக் காலப்பகுதியில் தேவையான அழுத்தங்களைப் பிரயோகித்து எமக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொள்ளாவிட்டால் வேறு எந்தக் காலப்பகுதியிலும் பெற்றுக் கொள்ளமுடியாது.

எதிர்வரும் ஆண்டு தேர்தல் ஆண்டாக அமையவுள்ளதால், ரணில் உள்ளிட்ட தென்னிலங்கையின் அரசியல்வாதிகள் தமது வாக்கு வங்கியினைக் கருத்தில் கொண்டு தமிழர்களின் தீர்வு விடயத்தில் சாதகமான முடிவுகளை எடுக்க மாட்டார்கள்.

ஏனெனில் இவ்விடயம் தென்னிலங்கையில் மஹிந்த அணியினர் உள்ளிட்ட எதிர்த்தரப்பினருக்கு எதிர்ப்பிரசாரத்தினை மேற்கொள்வதற்கு வழியமைக்கும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.