நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Friday, December 28, 2018

கிளிநொச்சியில் ரணிலின் கட்சி சகாவை துரத்திய அதிகாரி

Friday, December 28, 2018
Tags


அரசாங்க அதிபர்களுக்குரிய கதிரையை வழங்க மறுத்த ஐ.தே.கட்சியின் அமைப்பாளர் தான் எனக் கூறித்திரியும் ஒருவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவின் செயலாளரின் எழுத்து மூல உத்தரவுக்கமைவாக அவ்விடத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்.

வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்குதல் தொடர்பான முக்கிய கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட அரச செயலகத்தில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது.

இதன் போது அக்கூட்டத்தில் நுளைந்த ஐ.தே.கட்சியின் அமைப்பாளர் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சு.அருமைநாயகத்திற்கு ஒதுக்கப்பட்ட கதிரையில் சென்று அமர்ந்திருந்தார். 

அவ்வேளையில் அரசாங்க அதிபர் மாவட்டத்தின் வெள்ள அனர்த்தம் தொடர்பான விளக்கத்தினை கணினியின் துணையுடன் வழங்கிக்கொண்டிருந்தார்.

வெள்ளப் பாதிப்புத் தொடர்பில் விளக்கமளித்து முடிந்த கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தனது இருக்கைக்குத் திரும்பிய போது அவரது இருக்கையில் அமர்ந்திருந்த ஐ.தே.கட்சியின் அமைப்பாளர்அதனை வழங்க மறுத்து அடம்பிடித்துள்ளார்.

அவ்வேளையில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் முல்லைத்தீவு மாவட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக தனது கதிரையிலிருந்து எழுந்து சென்ற போது மேற்படி ஐ.தே.கட்சியின் அமைப்பாளர்அக்கதிரையில் தாவி அமர்ந்துகொண்டார்.

முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் விளக்கமளித்து விட்டு தனது இருக்கைக்குத் திரும்பிய போது அவருக்குரிய கதிரையை வழங்க மறுத்து அவரை வேறு இடத்தில் சென்று அமருமாறு கூறி அடம்பிடித்துள்ளார்.

இச்சம்பவத்தை ஆரம்பம் முதல் கண்ணுற்ற பிரதமரின் செயலாளர் உடனடியாகச் செயற்பட்டு அரசாங்க அதிபர்களுக்குரிய கதிரையை வழங்கி விட்டு அவ்விடத்தை விட்டு அகலுமாறு கடதாசியில் எழுதி ஐ.தே.கட்சியின் அமைப்பாளரிடம்கொடுப்பித்தமையை அடுத்தே அவர் அரசாங்க அதிபர்களுக்குரிய கதிரையை விட்டு எழுந்து அவ்விடத்தை விட்டு அகன்று சென்றுள்ளார்.

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்குவதற்கன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு வருகை தந்த அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிபர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோருக்கென அவர்களை அடையாளப்படுத்தி கதிரைகள் வழங்கப்பட்டிருந்தன.

அப்படியாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்திலேயே ஐ.தே.கட்சியின் அமைப்பாளர் எனக் கூறிக்கொண்டு புகுந்தவர் அரசாங்க அதிபருக்கு ஒதுக்கப்பட்ட கதிரையில் சென்று அமர்ந்துகொண்டு அக்கதிரையை அவருக்கு வழங்க மறுத்து அடம்பிடித்து பிரதமரின் செயலாளரது எழுத்து மூல உத்தரவுக்கமைய அவ்விருக்கையிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தார்.