நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Monday, December 31, 2018

இராணுவப் புலனாய்வு பிரிவினர் மீது வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை


ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் தொடர்பில், இராணுவப் புலனாய்வு பிரிவினர் மீது வழக்குத் தாக்கல் செய்ய குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்திச் சென்று காணாமல் ஆக்கப்பட்டார். அவர் தொடர்பான எவ்வித தகவல்களும் வெளியாகாத நிலையில், அவரை கொலைசெய்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில், இராணுவப் புலனாய்வு பிரிவினர் மீது வழக்குத் தாக்கல் செய்ய சட்டமா அதிபரின் ஆலோசனையை பெறவுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமலாக்கப்படுவதற்கு முன்னர் இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அத்தோடு இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முடிவடைந்துவிட்டதாகவும் எனினும், விசாரணைகளின் போது பிரதான சந்தேகநபர்களாக இராணுவ புலனாய்வு அதிகாரிகள் உள்ள நிலையில், விசாரணைக்கு இலங்கை இராணுவம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கவில்லை என்றும் பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.

இதன் காரணமாக குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்வது தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையை பெறவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் விசாரணைகளுக்கு இராணுவம் உதவி வழங்கியதென்றும், எந்தவொரு சாட்சியமும் இல்லாமல் இராணுவ அதிகாரிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டால், அவர்களைப் பாதுகாக்க இராணுவம் தனது சட்டப் பிரிவைப் பயன்படுத்தும் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!