நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Friday, December 28, 2018

வரவு செலவு திட்ட முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலம் ஜனவரியில் சமர்பிப்பு – நிதி ராஜாங்க அமைச்சர்

Friday, December 28, 2018
Tags


2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலத்தை ஜனவரியில் நாடாளுமன்றத்தில் சமர்பிப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதி ராஜாங்க அமைச்சர் இரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.

அதேவேளை, எதிர்வரும் பெப்ரவரி மாதம் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் வரவு செலவு திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, ஒப்புதலை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட 2019 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கை எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளது.

அதற்கு புதிய யோசனைகள் உள்ளடக்கப்படமாட்டாது எனவும், 2018 ஆம் ஆண்டின் கடன் செலுத்தல்கள், வட்டி கொடுப்பனவு, அரச பணியாளர்களின் வேதனம், குறிப்பிட்ட அரச சேவை வேதன அதிகரிப்பு என்பன நடைமுறைப்படுத்தப்படும் என்றும் நிதி ராஜாங்க அமைச்சர் இரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.

இதுதவிர, தேசிய பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் போக்குவரத்து போன்ற அத்தியாவசிய சேவைகள் தொடர்பிலான செலவினங்கள் இடைக்கால கணக்கறிக்கையின் படி ஜனவரி மாதம் தொடக்கம் ஈடுசெய்யபடவுள்ளது.