நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Sunday, December 30, 2018

ஆபத்தான கட்டத்தை நோக்கி நகரும் மைத்திரியின் செயற்பாடு!

Sunday, December 30, 2018
Tags


#maithripala_sirisena

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அதிரடி தீர்மானம் ஆபத்தான கட்டத்தை அடையவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று எச்சரித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் கீழ் பொலிஸ் திணைக்களத்தை இணைத்துள்ளமையின் மூலம் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் கீழ் பொலிஸ் திணைக்களத்தை வைத்து கொள்வதற்கு ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானம் 2013ஆம் ஆண்டிற்கு முன்னர் காணப்பட்ட ராஜபக்ச ஆட்சியை நோக்கி மீண்டும் நாட்டை கொண்டு செல்லும் முயற்சியாக உள்ளளெதன குறிப்பிடப்பட்டுள்ளது.

1991ஆம் ஆண்டு பொதுநலவாய நாடுகள் இணக்கம் வெளியிட்ட ஹராரோ ஒப்பந்தத்தில் உள்ள நல்லாட்சி கொள்கையை, மீறும் வகையிலும், மனித உரிமை பாதுகாப்பிற்கு எதிராக செயற்படும் வகையிலும் ஜனாதிபதியின் தீர்மானம் உள்ளதென குறிப்பிடப்படுகின்றது.

2013ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 16ஆம் திகதி சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் கீழ் பொலிஸ் திணைக்களம் நியமிக்கப்பட்டது.

எனினும் பின்னர் அந்த அமைச்சு, மனித உரிமை பாதுகாப்பு தொடர்பிலான சிறந்த பாடம் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய அமைக்கப்பட்டது.

எப்படியிருப்பினும் தற்போதைய ஜனாதிபதி அந்த நடவடிக்கையினை பின்நோக்கி கொண்டு சென்று பாதுகாப்பு அமைச்சின் கீழ் பொலிஸ் திணைக்களத்தை வைத்து கொள்வதற்கு தீர்மானித்துள்ளார்.